Enquire Now!

பணியிட பாலியல் துன்புறுத்தல்

 

‘தவறான’ மற்றும் ‘சரியான’’ பணியிட கலாச்சாரம் என்பதை அடையாளம் காண்பது மற்றும் வகைப்படுத்துவது மிகவும் கடினம், ஏனெனில் இதனைப்புரிந்து கொள்தல் பணியிட கலாச்சாரம் முதல் ஒன்றாக பணிபுரிபவர்கள் எம்மாதிரியான கலாச்சார அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது வரை பல கூற்றுகளைப்பொருத்தது. இருப்பினும், பெண்கள் மற்றும் மக்களிடையே பாலியல் வன்முறை குறித்த கடுமையான விழிப்புணர்வு குறைபாடு இருந்து வருகிறது. பெண்கள் அடிக்கடி வன்முறைக்கு ஆளாகி தங்கள் மன, உணர்ச்சிபூர்வ மற்றும் உடல்நல மற்றும் பணித்திறன் பாதிப்பிற்கு ஆளாகுகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உரிமைகள், மற்றும் பிரச்சினைகளை தீர்க்க உதவும் முறையீட்டு அமைப்புகள் மற்றும் குழுக்கள் ஆகியவைகளைப்பற்றி அறியாததால். பல நிகழ்ச்சிகள் வெளிவராமல் போய்விடுகிறது

இந்த பாடக்கோப்பு, பணியாளர்கள், பணிக்கு அமர்த்துபவர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு பணியிட பாலியல் பலாத்கார கருத்துக்கள் மற்றும் அதற்கான சட்டங்களைப்பரிச்சயமாக்கும் நோக்குடையது. இது ஒரு நிறுவனத்தின் பணியிடத்தில் உள்ள பணியாளர்கள் கேள்விக்குரிய நடத்தைகளை அடையாளம் கண்டு புகார் அளிக்கும் செய்முறைகளை அறிய உதவும். மேலும், இந்த பாடக்கோப்பு ஆரோக்கியமான பணியிட சூழலை பராமரிக்க இது போன்ற குறைகளை திறம்பட நிர்வகித்து மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க உதவும். இளம் வழக்கறிஞர்கள், இந்த பாடக்கோப்பை பாலியல் பலாத்காரம் குறித்த சட்டம், முறையீடு அமைப்புகள் மற்றும் சட்ட தொடர் நடவடிக்கைகள் ஆகியவற்றைப்பற்றி அறிந்து கொள்வதற்காக எடுத்துக்கொள்ளலாம்.

படித்ததின் பயன்கள்

 
 

இந்த பாடக்கோபை முடித்த பின்னர், கற்றுக்கொண்டவர்கள் கீழ்கண்டவற்றை செய்ய இயலும்:

  • பாலியல் பலாத்காரம் குறித்த வித்தியாசமான நடத்தை மற்றும் நிகழ்ச்சிகளை அடையாளம் காண முடியும்.
  • குறை முறையீடு அமைப்பை வகைப்படுத்தி மற்றும் நடத்திக்காட்ட இயலும்.
  • பணியிட பாலியல் பலாத்காரங்களை தவிர்க்கும் வழிகளை விவாதிக்க முடியும்.
  • பணியிடத்தில் பாலியல் பலாத்காரம் வழக்குகள் குறித்து ஆலோசனை வழங்க இயலும்.

பாடக்கோப்பு விளக்கம்

 
 
  • பிரிவு 1 – பணியிட பாலியல் வன்முறை குறித்த முன்னுரை.
  • பிரிவு 2 – பணியிட பாலியல் வன்முறை தடுப்பு மற்றும் தடுப்பு
  • பிரிவு 3 – பணியிட பாலியல் வன்முறை குறித்து புகார் பதிவு செய்யும் முறை
  • பிரிவு 4 – முடிவுரை
  • சான்றிதழ் தேர்வு/மதிப்பாய்வு

CERTIFICATION

 

Honors Badge

இந்த பாடக்கோப்பை யார் படிக்க வேண்டும்?

  • பணிக்கு அமர்த்துபவர்கள்
  • பணியாளர்கள்
  • மாணவர்கள்
  • வழக்கறிஞர்கள்
  • நிறுவன அமைப்பில் பணிபுரியும் அல்லது பாலியல் வன்முறையை தடுத்து மற்றும் தடை செய்யும் ஆர்வமுள்ள பல்வேறு பங்குதாரர்கள்.

நிலை: முதல் நிலை

மொழி: தமிழ்

காலம்: 6 மாதங்கள்

கணிப்பு முறைகள்

முன்னேற்றம், ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் கேள்விகள் மற்றும் தேர்வாய்வின் மூலம் ஆய்வு செய்யப்படும். கற்பவர்கள் பாடப்பிரிவின் இறுதியில் உள்ள தேர்வினை எழுத முயற்சித்து, பாட சான்றிதழ் பெற குறைந்த பட்சம் 50% மதிப்பெண்கள் பெற வேண்டும்.

ஆசிரியர் பற்றி

ஹர்லீன் கவுர், 2013 முதல் தில்லி மற்றும் சண்டிகரில் பாலின உரிமைப்பிரிவில் பணியாற்றி வருகிறார். அவர் நேஷனல் பல்கலைகழக நீதித்துறையியலின் பாலியல் வன்முறை தடுப்பு மற்றும் பணியிட மாறுபாட்டின் ஆன்லைன் டிப்ளமா பாடக்கோப்பை கருத்தாக்கம் செய்த மற்றும் வடிவமைத்த குழுவுடன் தீவிரமாக ஈடுபட்டவர், ஐசிசி நிறுவனங்களின் வெளிப்புற உறுப்பினர் மற்றும் கற்பிப்பவராக பணியாற்றியதில், அவர் பாலினம் மற்றும் பணியாளர் உரிமைப்பிரிவில் பணிபுரிந்த பல தொழில் வல்லுனர்களை பேட்டி எடுத்துள்ளார்.

Learners who viewed in this course, also viewed:

Let’s Start Chatbot