ஓரு உயிலை எவ்வாறு இயற்றுவது?

 
ENROLL NOW ALREADY ENROLLED

நீங்கள் இறக்கும் போது உங்களுக்கு பிடித்தமானவருக்கு நீங்கள் கொடுக்க விரும்பும் சொத்து வைத்திருக்கிறீர்களா? நீங்கள் இல்லாத போது உங்கள் குழந்தைகளுக்கு காப்பாளரை நியமிக்க விரும்புகிறீர்களா? பிரச்சினையில்லாமல் இருப்பதை உறுதிப்படுத்த உங்களுக்கு உயில் ஒன்றே தீர்வு! உங்கள் சொத்து, உங்கள் இறப்பிற்கு பின்னர், உங்கள் அடுத்த வாரிசுகளுக்கு போய் சேரும் என்பது பொதுவான தவறான கருத்து ஆனால், அது உண்மையில்லை. இந்தியாவில், சொத்து பங்கீடு குறித்து சச்சரவுகள் இருக்கின்றன. அதனால், உயில் ஒன்றை உருவாக்குவதன் மூலம், உங்கள் சொத்து நீங்கள் விரும்பும் வகையில் குடும்பத்தாருக்கு சச்சரவின்றி பகிர்ந்தளிக்கப்படுவது உறுதிப்படுத்தப்படுகிறது. பல சமயங்களில் வழக்கறிஞர்கள், உயிலின் கருத்தை ஒருவர் நன்கு புரிந்து கொள்வதற்காக அவரின் முடிவான உயில் ஒன்றை வரையறுப்பர்.

இந்த பாடக்கோப்பு, உயில் அமைக்கும் போது ஏற்படும் பொதுவான தவறான கருத்துக்களை நீக்கும் குறிக்கோள் உடையது. உயில் அமைப்பதில் உபயோகப்படுத்தப்படும் வார்த்தைகளுடன், ஒரு உயிலை செல்லுபடியாக்கும் வகை மற்றும் அதன் பிரிவுகள் இங்கு விவரமாக விவாதிக்கப்படுகின்றன. உயிலின் மாதிரி அமைப்புகளும் உங்கள் உயிலை நீங்கள் புரிந்து கொண்டு வடிவமைக்க குறிப்புகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த பாடக்கோப்பு தேவைப்படுபவர்களுக்கு ஆலோசனை வழங்க வழக்கறிஞர்களுக்கு உதவியாக இருக்கும் ஒன்றாகும்.

பாடக்கோப்பின் பயன்கள்

 
 

இந்த பாடத்தொகுப்பை முடித்த பின்னர், நீங்கள்:

 • பொதுவாக நடைபெறும் தவறான விளக்கங்களை தவிர்க்கலாம்.
 • உயில் வரையறுப்பதில் முக்கிய குறிப்புகளை அடையாளம் காணலாம்.
 • உயில் வரையறுக்கப்படுவதன் பயனை ஆய்வு செய்யலாம்.
 • உயில் வகைகளை வேறுபடுத்தி காட்டலாம்.
 • உயில் அமைக்கப்படும் தேவை மற்றும் வழிகளை புரிந்து கொள்ளலாம்.

பாடக்கோப்பு விளக்கம்

 
 
 • பிரிவு 1 – உயில் மற்றும் இறுதி சாசனம்.
 • பிரிவு 2 – வாரிசு சட்டம்
 • பிரிவு 3 – உயில் அமைத்தல்
 • சான்றிதழ் தேர்வு/மதிப்பாய்வு

இந்த பாடக்கோப்பை யார் படிக்க வேண்டும்?

 • வழக்கறிஞர்கள்
 • சட்ட அறிவுரையாளர்கள் மற்றும் ஆலோசகர்கள்
 • ஆய்வு மாணவர்கள்
 • உயில் அமைப்பதில் ஆர்வமுள்ள பொது மக்கள்.

நிலை: ஆரம்ப நிலை

மொழி : தமிழ்

கணிப்பு முறைகள்

கற்றுக்கொள்பவர்கள் அனைத்து தேர்வாய்வுகளையும் சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் பாடக்கோப்பின் இறுதியில், சான்றிதழ் தேர்வில் பாட சான்றிதழ் பெற குறைந்த பட்சம் 50% மதிப்பெண்கள் பெற வேண்டும்.

ஆசிரியர் பற்றி

செல்வி. பிரேமலதா. எஸ் 13 வருட சிறந்த அனுபவமிக்க வழக்கறிஞர் மற்றும் சட்ட ஆலோசகர். அவர் கர்நாடகா உயர் நீதி மன்றம், விசாரணை நீதிமன்றம், மோட்டார் விபத்து கோரல் தீர்ப்பு மையம், நுகர்வோர் குழுக்கள், கடன் வசூலிக்கும் குழுக்கள், கர்நாடகா நிர்வாக தீர்ப்பு மையம், பணியாளர்கள் நீதிமன்றம், மற்றும் க்வாஸி-ஜுடிஷியல் அதிகாரம் மற்றும் மாற்று குறைதீர்ப்பு அமைப்பு ஆகிய பல்வேறு முகவாண்மைகளில் போதுமான வழக்காடும் அனுபவம் பெற்றவர். தற்போது, அவர் தனிப்பட்ட மற்றும் நிறுவனங்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு, சொத்து பரிவர்த்தனைகள், குடும்ப தகராறுகள், மாற்று முரண்பாடு தீர்வு முறைகள், வங்கியியல் மற்றும் காப்பீடு, சட்ட இணக்கம் போன்ற பல்வேறு வகையில் தொழில் வல்லமை ஆலோசனையுடன் கூடிய சட்ட சேவைகள் அளிக்கும் ஆலோசனை நிறுவனத்தை தலைமையேற்று நடத்தி வருகிறார்.
 

Learners who viewed in this course, also viewed: