இந்தியாவில் மாற்று வாத தீர்மான செயல்முறைகள்

 
ENROLL NOW

நீதிமன்றங்கள் மட்டும் நீதித்துறை இந்திய சட்ட அமைப்பின் அங்கீகாரம் பெற்ற தூண்களாக விளங்கும் போது மாற்று முரண்பாடு தீர்வு (ஏடிஆர்) படிப்படியாக வர்த்தக மற்றும் தனிப்பட்ட முரண்பாடுகளைத்தீர்க்கும் விருப்பத்தேர்வாக மாறி வருகிறது. பல மில்லியன் டாலர் எல்லை கடந்த கட்டுமானப்பணி முரண்பாடாக இருக்கட்டும் அல்லது கணவன் மனைவியிடையேயான வீட்டு சச்சரவாக இருக்கட்டும், ஏடிஆர் நுட்பங்கள், பல இடங்களுக்கு பொருந்துபவையாகவும் பாரம்பரிய வழக்கு தீர்க்கும் முறையை விட பல்வேறு பயன்கள் உடையதாகவும் இருக்கின்றன. இருப்பினும், பல வழக்கறிஞர்கள், ஆலோசகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் முரண்பாடு தீர்வை சரியாக அணுகுவதிலும் மற்றும் தேவையான திறன் இன்றியும் தவிக்கின்றனர்.

இந்த பாடக்கோப்பு, இந்தியாவில் வழக்கத்தில் இருக்கும் பரந்த ஏடிஆர் முறைகள் - தேசிய மற்றும் சர்வதேச முறைகள் மற்றும் அதன் பல்வேறு அமைப்பு பயன்பாடுகளை வரையறுக்கிறது ஒவ்வொரு மாற்று முரண்பாட்டு தீர்வு உத்தியின் நடைமுறை பயன்பாடு பற்றி விவாதித்து மற்றும் மக்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு துறையிலுள்ள மக்களுக்கு, தேவைப்படும் திறன் படைத்த பேச்சுவார்த்தையாளர்கள், சமரசம் செய்பவர் மற்றும் நடுவர்களை உருவாக்குவதே இந்த பாடக்கோப்பின் நோக்கமாகும்.

பாடக்கோப்பின் பயன்கள்

 
 

இந்த பாடக்கோபை முடித்த பின்னர், கற்றுக்கொண்டவர்கள் கீழ்கண்ட அறிவு மற்றும் திறன் படைத்தவர்களாக இருப்பர்:

  • ஏடிஆர் அமைப்புகள் மற்றும் பாரம்பரிய வழக்காடுமுறைகள் இடையே உள்ள ஒப்பீடு
  • நடைமுறையிலிருக்கும் பல்வேறு ஏடிஆர் உத்திகள் மற்றும் அவைகளிடையேயுள்ள வித்தியாசம்.
  • பல்வேறு ஏடிஆர் உத்திகளின் செயல்பாட்டு முறைகள்.
  • பல்வேறு ஏடிஆர் நுட்பத்திற்கேற்ப தேசிய மற்றும் சர்வதேச இடங்களுக்கிடையே உள்ள இடைமுகப்பு.

பாடக்கோப்பு விளக்கம்

 
 
  • பிரிவு 1 – மத்தியஸ்தம், சமரசம் மற்றும் தீர்வை ஆகியவைகளுக்கான அறிமுகம்.
  • பிரிவு 2 – மத்தியஸ்தம் சட்டம் குறித்த மீள்பார்வை.
  • பிரிவு 3 – மத்யஸ்தம் மற்றும் தீர்வை சட்டம், 1996இன் கீழ் மத்யஸ்த செயல்முறைகள்.
  • பிரிவு 4 – சர்வதேச வர்த்தக மத்யஸ்தம்
  • பிரிவு 5 – சமரசம், தீர்வை மற்றும் ஏடிஆரின் பிற அமைப்புகள்.
  • பிரிவு 6 – ஏடிஆர் முறைகளின் துறை சார்ந்த செய்முறை பயன்பாடு
  • பிரிவு 7 – முடிவுரை
  • சான்றிதழ் தேர்வு/மதிப்பாய்வு

இந்த பாடக்கோப்பை யார் படிக்க வேண்டும்?

  • சட்ட ஆலோசகர்கள் மற்றும் அ̀றிவுரையாளர்கள்
  • வழக்கறிஞர்கள்
  • சட்ட மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள்
  • மாற்று முரண்பாடு தீர்வு அமைப்பில் ஆர்வமுள்ள பிற பங்குதாரர்கள் இந்த பாடக்கோப்பை எடுத்துக்கொள்ள நீங்கள் வழக்கறிஞர் அல்லது மருத்துவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

நிலை: மத்திய நிலை

மொழி : தமிழ்

கணிப்பு முறைகள்

கற்றுக்கொள்பவர்கள் அனைத்து தேர்வாய்வுகளையும் சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் பாடக்கோப்பின் இறுதியில், சான்றிதழ் தேர்வில் பாட சான்றிதழ் பெற குறைந்த பட்சம் 50% மதிப்பெண்கள் பெற வேண்டும்.

ஆசிரியர் பற்றி

செல்வி. கீதாஞ்சலி ஷர்மா ஒரு தகுதி பெற்ற வழக்கறிஞர், சான்றிதழ் பெற்ற சமரசம் செய்பவர் மற்றும் தற்போது கர்நாடகா அரசுக்கு ஆலோசகராக பணிபுரிபவர். அவர் லக்‌ஷ்மிகுமாரன் & ஶ்ரீதரன் சட்ட அதிகாரிகளிடன் ஆண்டிடிரஸ்ட் குழுவில் மூத்த துணையதிகாரியாக பணியாற்றியுள்ளார். அதில் அவர், எண்ணெய் & எரிவாயு, டேக்ஸி சங்கங்கள், வாகன நிறுவனங்கள், கன்வேயர் பெல்ட் & பெயிண்ட் துறை போன்ற பல்வேறு துறைகளை சார்ந்த தேசிய மற்றும் சர்வதேச கட்சிக்காரர்களுக்கான கருத்தாக்கம் மற்றும் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். அவர் டெல்லி சேம்பர்ஸ் ஆஃப் நகுல் டேவன், பேரிஸ்டர் (20, எஸ்ஸெக்ஸ் ஸ்ட்ரீட்) உடனும் துணையதிகாரியாக பணியாற்றி வந்தார்.

செல்வி. ஷர்மா கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்திலிருந்து மேல்நிலை பட்டம் பெற்றவர். அவர் சிகாகோ பல்கலைகழகத்தின் ஹேரிஸ் பப்ளிக் பாலிசி ஸ்கூலின் மாணவர் ஆவார். அவர், கௌரவம் மிக்க ஹேக் அகாடமி ஆஃப் இண்டர்நேஷனல் லாவின் பங்கேற்க ஸ்காலர்ஷிப் அளித்து கௌரவிக்கப்பட்டவர் மற்றும் 2015இல் அமெரிக்கன் பார் அசோசியேஷன் ஏசியா பசிஃபிக் இண்டெர்நேஷனல் மீடியேஷன் சம்மிட்டில் பங்கேற்க பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

முன்பு, அவர் அமெரிக்கன் பார் அசோசியேஷன் (ஏபிஏ), செண்ட்ரல் போர்ட் ஆஃப் செகண்டரி எஜுகேஷன் (சிபிஎஸ்ஈ) மற்றும் யுனிவர்சிடி கிராண்ட்ஸ் கமிஷன் (யுஜிசி) உட்பட்ட நிறுவனங்களுக்கு பாடத்தொகுப்புகள் மற்றும் டூல்கிட்டுகள் உருவாக்கியுள்ளார்.
 

Learners who viewed in this course, also viewed: