Enquire Now!

தகவல் உரிமை (ஆர்.டி.ஐ) விண்ணப்பம் செய்வதற்கான நடைமுறை மற்றும் செயல்முறை

 

ஆர்.டி.ஐ, குடிமக்களின் கைகளில் இருக்கும் சக்திவாய்ந்த கருவியாகும். இது வெளிப்படைத்தன்மையை மட்டுமல்லாமல், நிர்வாகம் பொறுப்புடைமையோடு செயல்படும் தன்மையையும் கொண்டுவருகிறது. பல்வேறு திட்டங்கள் மற்றும் துறைகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பான தகவல்களைப் பெற, மாணவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் இதை பெருமளவில் பயன்படுத்துகின்றனர். ஆர்.டி.ஐ. பரவலாகப் பயன்படுத்தப்பட்டும் அனைவரும் அறிந்த ஒன்றாகவும் இருந்தாலும், எந்தத் தகவலை, எப்படி, எங்கிருந்து சேகரிப்பது எனும் செயல்முறை அறியாததால் பலர் இச் செயல்முறையை சரிவரப் பிரயோகம் செய்யத் தெரியாமல் இதன் சக்தியை குறைத்து மதிப்பிடுகின்றனர்.

இச் செயல்முறையின் அனைத்து முக்கிய அம்சங்கள். உதாரணங்கள் மற்றும் மாதிரிகளை பகிர்ந்து ஆர்.டி.ஐ விண்ணப்பத்தை சரிவரச் தாக்கல் செய்ய உங்களை தயாரிக்க இந்த கோர்ஸ் உங்களுக்கு உதவுகிறது. அரசாங்கத்தின் பணியில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புணர்வையும் ஊக்குவிக்கும் தகவல் உரிமை சட்டம்- 2005ன் முக்கிய அம்சங்களைக் கோடிட்டுக் காட்டுகிறது. தகவல் உரிமை சட்டம்-2005ன் நடைமுறைப் பயன்பாடு மற்றும் தெளிவை பல்வேறு பங்குதாரர்களிடையே வெளிக்கொணர்கிறது.

கற்றலின் பலன்கள்

 
 

இந்தப் பாடத்திட்டத்தை கற்றபின் உங்களால்:

  • தகவல் உரிமைச் சட்டம், 2005-ன் நடைமுறைப் பயன்பாட்டினை புரிந்து கொள்ள முடியும்
  • இந்தியாவின் எந்தவொரு பிராந்தியத்திலும் உள்ள பொது அலுவலகத்திலிருந்தும் தகவல் அறிய ஆர்.டி.ஐ விண்ணப்பம் தாக்கல் செய்ய முடியும்
  • சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள பசல் செய்யும் முறையைப் பற்றி விவாதிக்கலாம்
  • தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளிப்படுத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ள தகவல்களை அடையாளம் காண முடியும்

பாடத்தின் உருவரைக் குறிப்பு

 
 
  • தொகுதி 1 – இந்தியாவில் தகவல் உரிமையின் ஆட்சி: குடிமக்களின் ஆயுதம்
  • தொகுதி 2 – "தகவல்" பெற ஆர்.டி.ஐ. சட்டத்தைப் பயன்படுத்துதல் - தகவல் பெறுவதற்கு கோரிக்கை தாக்கல் செய்யும் முறை
  • தொகுதி 3 – விண்ணப்பத்தை பைசல் செய்வது மற்றும் அதற்கான நேர வரம்புகள்
  • தொகுதி 4 – ஆர்.டி.ஐயின் கீழ் வெளிப்படுத்த விலக்களிக்கபட்டுள்ள தகவல்கள்
  • தொகுதி 5 – அமலாக்க நடவடிக்கைகள்
  • தொகுதி 6 – சாதகமான முடிவுகள் மற்றும் வழக்கு ஆய்வுகள்
  • தொகுதி 7 – தகவல் உரிமைக்கான பரிணாமம்
  • தொகுதி 8 – முடிவுரை மற்றும் முன்னெடுத்துச் செல்லும் முறைகள்
  • தொகுதி 9 – பின் இணைப்பு
  • சான்றிதழ் தேர்வு / மதிப்பீடு

CERTIFICATION

 

Honors Badge

யார் கலந்து கொள்ளவேண்டும்

  • வழக்கறிஞர்கள்
  • சட்ட மாணவர்கள்
  • சமூகப் பணியாளர்கள்
  • பத்திரிகையாளர்கள்
  • ஆர்.டி.ஐ தாக்கல் செய்வதில் ஆர்வமுள்ள பொது மக்கள்
  • பிற ஆர்வமுள்ள பங்குதாரர்கள்

நிலை: தொடக்கநிலை

மொழி: தமிழ்

காலம்: 6 மாதங்கள்

மதிப்பீட்டு முறை

சான்றிதழ் பெற, பங்கேற்பவர் அனைத்து பயிற்சிப்பாடங்களையும் சமர்பிக்கவேண்டும். படிப்பின் முடிவில்,நடத்தப்படும் தேர்வில் குறைந்தது50% மதிப்பெண் பெறவேண்டும்.

ஆசிரியரைப் பற்றி

ரிதிகா ரிது, புவனேஸ்வரிலுள்ள S'O'A நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் லா-வில் சட்டப்படிப்பை முடித்துள்ளார். ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த B.Sc.LLB ( Hons) படிப்பில் சிறந்த ஒட்டுமொத்த செயல்திறனுக்காக பல்கலைக்கழகத்தால் அவருக்கு தங்க பதக்கம் வழங்கப்பட்டது. தற்போது அவர் தில்லி பார் கவுன்சிலில் பதிவு செய்து பலதரப்பட்ட சட்டப் பணிகளை முன்னெடுத்து, நிர்வகிப்பதில் 2 ஆண்டு அனுபவம் பெற்றுள்ளார்.

Learners who viewed in this course, also viewed:

Let’s Start Chatbot